இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலக்கடுத்தின் காரணமாக காணாமல் போயிருந்த ஆறு வயது சிறுவன் ஒருவர் இரண்டு நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் உள்ள சியாஞ்சூர் நகரில் கடந்த 21ஆம் திகதி, 5.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் 270இற்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 700இற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர். அத்துடன் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயுள்ளனர்.
இரண்டு நாட்களின் பின்னர் மீண்டு வந்த சிறுவன்
இந்தோனேசிய நிலநடுக்க பகுதியில் தொடர்ந்து மீட்பு பணி நடந்து வரும் நிலையில், சியாஞ்சூர் பகுதியில் குகநாங் துணை மாவட்டத்தில் நக்ராங் கிராமத்தில் நடந்த மீட்பு பணியில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய 6 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த அஜ்கா மவுலானா மாலிக் என்ற அந்த சிறுவனை இந்தோனேசிய பேரிடர் மேலாண்கழகம் மீட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் சிறுவனின் பாட்டி மற்றும் பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் உயிரிழந்துள்ளனர்.