பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன்.
இவர் இரண்டுமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமிதாப் பச்சன். தலைமுறை தலைமுறையாக பார்வையாளர்களை கவர்ந்து, மகிழ்வித்த இந்தியாவின் குறிப்பிடத்தக்க திரையுலக ஆளுமைகளில் இவரும் ஒருவர். இரண்டுமுறை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பின்பும் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘குட்பை’, ‘பிரம்மாஸ்திரா’ போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில், நடிகர் அமிதாப் பச்சனின் பெயர், குரல் போன்றவற்றை பயன்படுத்த டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதாவது, அமிதாப் பச்சனின் பெயரில் போலி கோட்டீஸ்வர நிகழ்ச்சி, லாட்டரி மோசடி நடைபெறுவதாகவும் இவரின் புகைப்படத்தை போஸ்டர்கள், ஆடைகள் போன்றவற்றில் உபயோகிப்பதனால் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வணிக நோக்கத்துடன் முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அமிதாப் பச்சன் சார்பில் டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அமிதாப் பச்சனின் பெயர், குரல் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை முன் அனுமதியின்றி பயன்படுத்த தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.