ஆப்பிள் நிறுவன சாதனங்கள் பெருமளவு ஆபத்தில் சிக்கியும், சீராக இயங்கும் அளவுக்கு தரம் கொண்டிருப்பதற்கு உலகளவில் பெயர் பெற்றுள்ளன.
ஒரு வருடத்திற்கு முன் கடலில் விழுந்த ஐபோன் மாடல் கரை ஒதுங்கிய சம்பவம் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாதகமாக மாறி இருக்கிறது.
ஆகஸ்ட் 2021 வாக்கில் சர்ஃபிங் செய்ய கடலுக்குள் சென்ற கிளார் அட்ஃபீல்டு என்ற பெண் தனது ஐபோனை கடலில் தொலைத்து விட்டார். 39 வயதான கிளார் தற்போது கடலில் விழுந்து காணாமல் போன தனது ஐபோனை கண்டறிந்து விட்டதாக தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒரு வருடத்திற்கு பின் மீட்கப்பட்ட ஐபோன் தற்போது சீராக இயங்குகிறது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
கிளார் அட்ஃபீல்டு நீர்புகாத பையில் வைத்திருந்த ஐபோன் 8 பிளஸ் மாடலை கடந்த ஆண்டு கடலில் தொலைத்து விட்டார். கடலில் விழுந்து காணாமல் போன ஐபோன் தற்போது கரை ஒதுங்கி இருக்கிறது. இதனை பிராட்லி காட்டன் என்ற பெயர் கொண்ட நாய் கண்டறிந்து இருக்கிறது. ஐபோன் வைக்கப்பட்டு இருந்த நீர்புகாத பையினுள் அட்ஃபீல்டு தாயாரின் மருத்துவ விவரங்கள் அடங்கிய அட்டை வைக்கப்பட்டு இருந்தது.
இதை வைத்தே அட்ஃபீல்டை தொடர்பு கொண்டிருக்கின்றனர். ஏப்ரல் 2021 முதல் சர்ஃபிங் செய்வதை அட்ஃபீல்டு வழக்கமாக கொண்டிருந்தார். எப்போது சர்ஃபிங் செய்யும் போது தனது ஐபோன் அடங்கிய பையினை கழுத்தில் மாட்டிக் கொள்வார். அதே போன்று தான் செய்யும் போது தான் தண்ணீரில் தவறி விழுந்த அட்ஃபீல்டு பையை எப்படியோ தொலைத்திருக்கிறார்.
தொலைந்து போன ஐபோன் மீண்டும் கிடைக்கும் என கனவிலும் எதிர்பார்க்கவில்லை என அட்ஃபீல்டு தெரிவித்து இருக்கிறார். மேலும் 450 நாட்கள் கடலில் இருந்த ஐபோன் மீண்டும் வேலை செய்யும் என்பதை நம்ப முடியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.