Loading...
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தது.
இதற்கமைய, வெளியான க.பொ.த (சா/த) முடிவுகளின்படி தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 10,863 பேர் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளனர்.
மேலும், 498 பரீட்சார்த்திகளின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
Loading...
இதற்கமைய, க.பொ.த சாதாரணதர பரீட்சைக்குத் தோற்றிய 231,982 பரீட்சார்த்திகள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இதேவேளை, 2021 கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு சான்றிதழ்களை எதிர்வரும் திங்கட்கிழமை (28) முதல் பெற்றுக்கொள்ள முடியும் எனவும்,ஒன்லைன் முறையில் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D.தர்மசேன தெரிவித்துள்ளார்.
Loading...