ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க புதிய மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2023 வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக திஸாநாயக்க அரசாங்கத்துடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்
இதன்படி திஸாநாயக்க புதிய மின்சக்தி அமைச்சராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக ஜயசேகர தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது அதற்கு எதிராக வாக்களிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், திஸாநாயக்க கட்சியின் தீர்மானத்திற்கு எதிராகச் சென்று வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்.