வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புடவை அணிந்து பாடசாலைக்கு கடமைக்குச் செல்ல முடியாது ஆசிரியைகள் தொடர்பில் ஆய்வு நடாத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
புடவை கொள்வனவு செய்ய முடியாத காரணத்தினால் வேறும் ஆடைகளை அணிந்து பாடசாலை செல்ல நேரிட்டுள்ளதாக ஆசிரியைகள் விசனம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இலவசமாக புடவைகளை வழங்கும் திட்டம்
இவ்வாறான வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகளை வழங்கும் திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாள்தோறும் புடவை அணிந்து செல்வதனால் ஏற்படக் கூடிய செலவினை தவிர்க்கவே சில ஆசிரியைகள் வேறும் ஆடைகளை விரும்புகின்றார்கள் போலும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு புடவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக அமைச்சர் பிரேமஜயந்த தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.