Loading...
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
அமைச்சர் அலி சப்ரி, நாளை அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டுச் செல்வார் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
ஐக்கிய அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் அன்தனி பிலின்கன் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுடன் சப்ரி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
Loading...
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமை மற்றும் கடன் மறுசீரமைப்பு போன்றன தொடர்பில் இந்த விஜயத்தில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடனான பேச்சுவார்த்தைகள் குறித்து அமைச்சர் சப்ரியின் விஜயத்தின் போது முக்கிய கவனம் செலுத்தப்பட உள்ளது.
Loading...