‘மீன் ஷ்சிப் 5’ என்ற பாரிய பயணிகள் உல்லாச கப்பல் எதிர்வரும் 29ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வரும் இந்தக் கப்பல் முதலில் கொழும்பு கிழக்கு கொள்கலன் முனையத்தில் நங்கூரமிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகம்
கொழும்பு துறைமுகத்தின் பயணிகள் இறங்குத்துறைக்கு இந்த கப்பலை நங்கூரமிட இடவசதி செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர், எதிர்வரும் 30ஆம் திகதி குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சென்றடைந்து அன்றைய தினமே சுற்றுலா பயணிகளுடன் புறப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
குறித்த கப்பலில், 2 ஆயிரத்து 30 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வரவுள்ளனர். அத்துடன், 945 கப்பல் பணியாளர்கள் குறித்த கப்பலில் பணியாற்றுகின்றனர்.
இதேவேளை, இலங்கையின் சுற்றுலா பயணிகளின் வருகை தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்பும் நிலையில் இந்த கப்பலின் வருகை சுற்றுலா துறையினருக்கு மேலும் வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என சுற்றுலாத்துறையினர் தெரிவித்துள்ளனர்.