இலங்கை கிரிக்கெட் அணி தேர்வாளர்களின் தலைவர் பிரமோத்ய விக்ரமசிங்க, தனது முன்னாள் அணித்தலைவரும் தற்போதைய தேசிய விளையாட்டு பேரவைத் (NSC) தலைவருமான அர்ஜுன ரணதுங்க, விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்த உலகக்கிண்ணப்போட்டியில் இலங்கையின் டி20 அணி அரையிறுதி இடத்தைப் பெறத் தவறியதை அடுத்து, ரணதுங்க தேர்வாளர்களை குற்றம் சுமத்தியிருந்தார்.
அத்துடன் கடந்த வியாழன் அன்று செய்தியாளர் சந்திப்பில், தற்போதைய தேர்வாளர்களுக்கு தேசிய விளையாட்டுத் தேர்வுக்குழுவின் (என்எஸ்எஸ்சி) ஒப்புதல் இல்லை என்றும் விரைவில் புதிய குழு நியமிக்கப்படும் என்றும் கூறினார்.
ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை அணி
இதனையடுத்து நாங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என நீங்கள் விரும்பினால், நேரடியாக எங்களிடம் கூறுங்கள், நாங்கள் அவ்வாறு செய்வோம். நாங்கள் நிரந்தரமாக இருக்க இங்கு வரவில்லை. நாங்கள் ராஜினாமா செய்ய தயாராக இருக்கிறோம்.
எனினும் சரியான காரணத்தை கூறுங்கள் என்று தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்ரமசிங்க, விளையாட்டுதுறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.
புள்ளிகள் பட்டியலில் நாங்கள் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். எட்டு ஆண்டுகளில், ஆசிய கிண்ணத்தை இலங்கை அணி வென்றது, பின்னர் 2024 இல் டி20 உலகக் கிண்ணத்துக்கு நேரடியாக தகுதி பெற்றது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றோம். இது, கடந்த 18 மாதங்களாக நாங்கள் மேற்கொண்ட முயற்சியின் பலன்கள் இல்லையா? விக்ரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இருந்து, சமிக்க கருணாரத்னவை நீக்கியதற்காக தேர்வாளர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். எனினும் அவர் இரண்டு காரணங்களுக்காக நீக்கப்பட்டார்.போட்டிக்கு தகுதியின்மை மற்றும் ஒழுக்கம் இல்லாமையே அவையாகும் என்று விக்ரமசிங்க விளக்கியுள்ளார்.