இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘லவ் டுடே’.
இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சில தினங்களுக்கு முன்பு இவர் இயக்கி நடித்த ‘லவ் டுடே’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்தது. இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுது. மேலும், இப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல், ‘லவ் டுடே’ திரைப்படம் உலக அளவில் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘லவ் டுடே’ திரைப்படம் வருகிற டிசம்பர் 2-ம் தேதி நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.