நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்கள் எரிவாயுவை தட்டுப்பாடு இன்றி கொள்வனவு செய்யும் வகையில் லாஃப் நிறுவனம் தனது விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த சில வாரங்களாக போதியளவு எரிவாயு கையிருப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், நாட்டிலுள்ள விநியோக வலையமைப்பு மற்றும் விநியோக வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு சிலிண்டர்களை வினைத்திறனுடன் நிரப்பி கொள்வனவு செய்வதற்கு நிறுவனம் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
லாஃப் எரிவாயு தட்டுப்பாடு
ஹோட்டல்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு நிறுவனத்திடம் போதுமான அளவு கையிருப்பு இருப்பதாகவும், வணிக மற்றும் உற்பத்திகளுக்கான எரிவாயு வெளியீடு தாமதமின்றி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, லாஃப் எரிவாயு தட்டுப்பாடு குறித்து வாடிக்கையாளர்கள் எந்த வகையிலும் அச்சப்பட வேண்டாம் என நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும், லாஃப் எரிவாயு தனது வாடிக்கையாளர்களுக்கு 1345 என்ற நேரடித் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி தங்களுக்கு அருகில் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கும் விநியோகஸ்தரை கண்டறியுமாறும் அறிவுறுத்தியுள்ளது.