முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.
ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்தது பிரேசில்.
கத்தாரில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரில் இரவு 9.30 மணிக்கு தொடங்கிய குரூப் ஜி பிரிவு ஆட்டம் ஒன்றில் வலிமையான பிரேசில் அணியும், சுவிட்சர்லாந்து அணியும் மோதின. கோல் அடிப்பதற்கு இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொண்ட போதும், முதல் பாதிவரை கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் சமனில் இருந்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் பிரேசில் வீரர் வினிசியஸ் ஜூனியர் எடுத்துக் கொடுத்த பந்தை, மற்றொரு வீரர் கேஸ்மிரோ கோலாக மாற்றினார். இறுதிவரை வேறு கோல் எதுவும் அடிக்கப்படாததால் அந்த கோலே வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற பிரேசில் ஜி பிரிவு புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்ததுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.