Loading...
கினிகத்தேனை – எபடீன் நீர் வீழ்ச்சியில் நீராடச்சென்று மாயமான இளைஞர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் நண்பர்களுடன் நீராடச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி மாயமானதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் பொகவந்தலாவ டின்சின் பிரதேசத்தில் வசிக்கும் கிசான் இனோஜன் வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Loading...
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் இன்றைய தினம் கடற்படை சுளியோடிகள் வரவழைக்கப்பட்டு தேடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்த நிலையில் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களால் இளைஞனின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...