யுத்தத்தில் உயிரிழந்தவர்களை தமிழர்கள் தமது வீடுகளுக்குள் இருந்தவாறு நினைவுகூருவது தவறு என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
விடுதலை புலிகள் அமைப்பினர் மனித உரிமைகளுக்கு எதிராகவே செயற்பட்டார்கள் என்றும் அவர்களையே தமிழர்கள் நினைவுகூருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை இலங்கையை பாதுகாக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்ட பௌத்த சாசனம் பாதுகாக்கப்பட்டால் தான் நாடு பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சமஷ்டி முறைமையின் கீழ் நாட்டை பிளவுப்படுத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் புத்தசாசனம் பற்றி குறிப்பிட வேண்டிய தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் தற்போதும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புத்தசாசனத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது என சரத் வீரசேகர தெரிவித்தார்