அமெரிக்க அணியை நெதர்லாந்து சந்திக்கிறது.
இங்கிலாந்து 2-வது சுற்றில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது.
உலக கோப்பை கால்பந்து போட்டியில் இதுவரை 7 நாடுகள் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. பிரான்ஸ் (‘டி’ பிரிவு), பிரேசில் (ஜி), போர்ச்சுக்கல் (எச்), நெதர்லாந்து, செனகல் (ஏ), இங்கிலாந்து, அமெரிக்கா (பி) ஆகியவை முன்னேறி உள்ளன.
‘ஏ’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த நெதர்லாந்து அணி 2-வது சுற்றில் ‘பி’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த அமெரிக்காவுடன் மோதுகிறது. வருகிற 3-ந்தேதி இரவு 8.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்த இங்கிலாந்து 2-வது சுற்றில் ‘ஏ’ பிரிவில் 2-வது இடத்தை பிடித்த செனகல்லை எதிர் கொள்கிறது. 4-ந்தேதி நள்ளிரவு 12.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.