இலங்கையின் தற்போதைய பொருளாதாரம் குறித்து நாடளாவிய ரீதியில் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த ஆய்வின்படி,60 சதவீதமான இலங்கையர்கள் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால், வேறு நாட்டிற்கு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் இடம்பெயர விரும்பும் நாடு
இவ்வாறு குடிபெயர்வதை நோக்காகக் கொண்டுள்ள பெரும்பான்மையான இலங்கையர்கள் கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு இடம்பெயர விரும்புகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டின் கடன் தொடர்பாக, பெரும்பாலான இலங்கையர்கள் குறிப்பாக 37 வீதமானோர், பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சீனா இலங்கைக்கு உதவும் என்று நம்புகின்றனர்.
மேலும் 24 வீதமானோர், இந்தியா இலங்கைக்கு உதவும் என்றும் 14வீதமானோர் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஜப்பான் உதவும் என்று நம்புகின்றனர்.
மக்களின் நம்பிக்கை
நாட்டின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் அணுகுவதை பெரும்பான்மையான 61வீத இலங்கையர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வுக்காணும் விடயத்தில் 57 வீத இலங்கை மக்கள் மத்தியில், மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவுக்கு நன்மதிப்பு உள்ளது.
இதனையடுத்து நிதியமைச்சராக ரணில் விக்ரமசிங்கவின் மீது 45 வீத மக்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா, 43 வீத பொதுமக்களின் நம்பிக்கையை பெற்றிருக்கிறார் என ஆய்வு தரவுகள் குறிப்பிடுகின்றன.