லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார்.
88-வது டெஸ்டில் விளையாடும் ஸ்டீவ் சுமித்துக்கு 29-வது செஞ்சூரியாகும்.
ஆஸ்திரேலியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் ஆடிய ஆஸ்திரேலியா நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 293 ரன் எடுத்து இருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலியா தொடர்ந்து ஆடியது. லபுஸ்சேன் அபாரமாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். அவர் 348 பந்துகளில் 20 பவுண்டரி, 1 சிக்சருடன் 200 ரன்னை தொட்டார். 204 ரன்கள் எடுத்த நிலையில் லபுஸ்சேன் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 402 ஆக இருந்தது.
இதே போல ஸ்டீவ் சுமித்தும் சதம் அடித்தார். 88-வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 29-வது செஞ்சூரியாகும். ஆஸ்திரேலியா அணி தற்போது வரை 141 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 513 ரன்கள் குவித்து ஆடி வருகிறது. ஸ்மித் 165 ரன்களிலும் ஹெட் 50 ரன்னிலும் தொடர்ந்து ஆடி வருகின்றனர்.