ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 598 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியின் லபுஸ்சேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இரட்டை சதமடித்து அசத்தினர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டி20 மற்றும் 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்கு 293 ரன் எடுத்திருந்தது. தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா 65 ரன் எடுத்தார். 3-வது வீரராக களம் இறங்கிய மார்னஸ் லபுஸ்சேன் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 154 ரன்னும், ஸ்டீவ் சுமித் 59 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய லபுஸ்சேன் சிறப்பாக ஆடி இரட்டை சதம் எடுத்தார். லபுஸ்சேன் 204 ரன்னில் அவுட்டானார். மறுபுறம் சிறப்பாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் 99 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட்டுகளை இழந்து 598 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. ஸ்டீவ் ஸ்மித் 200 ரன்களில் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் எடுத்துள்ளது. சந்தர்பால் 47 ரன்னும், பிராத்வெயிட் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.