ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் குத்தகை அடிப்படையில் புதிதாக சில விமானங்களை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவைக்கு மேலும் 11 புதிய விமானங்களை குத்தகை முறையின் கீழ் பெற்றுக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக விமான நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, Softlogic மற்றும் Odell நிறுவனங்களை பங்குச் சந்தையில் இருந்து நீக்குவதற்கு அசோக் பத்திரகே தீர்மானித்துள்ளதாக கடந்த வாரம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. பங்கு சந்தைக்கு ஆண்டு அறிக்கை வழங்காமையே இதற்குக் காரணம் எனவும் தெரியவந்துள்ளது.
குத்தகை அடிப்படையில் விமான கொள்வனவு
இதேவேளை, குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள விமானங்களின் காலம் நிறைவடைகின்றமையினால் அமைச்சரவை அனுமதியுடன் புதிதாக குத்தகை அடிப்படையில் விமானங்களை கொள்வனவு செய்ய உள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அடுத்த மூன்று மாதங்களில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் சிறப்பான சேவையை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.