தெற்கு இஸ்ரேலில் ரொக்கெட் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் உள்ள தளங்களை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன.
ஆயுத உற்பத்தி நிலையம் மற்றும் ஹமாஸுக்கு சொந்தமான நிலத்தடி சுரங்கப்பாதையை குறிவைத்து இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் தெற்கு இஸ்ரேலில் நடத்தப்பட்ட ரொக்கெட் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல் நேற்று சனிக்கிழமை மாலை காசா மற்றும் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் தரையிறங்கியதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து மிகவும் கவலையடைவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் கூறியுள்ளார்.
கடந்த வாரம் முதல் 10 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த படுகொலைகளை ஏற்றுகொள்ள முடியாது என்றும் பொறுப்புக்கூறல் அவசியம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.