தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து விரைவில் ஆட்சியை மீட்டெடுப்போம் என ஓ.பன்னீர் செல்வம் சபதம் எடுத்துள்ளார்.
தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்தியாசாகர ராவ் அதிகாரப்பூர்வமாக தெரிவு செய்தார்.
ஆளுநரின் இந்த அதிரடி அறிவிப்பால் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது அணியினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், கிரீன் வேல்ஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்கள் மத்தியில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், தங்களது அணிக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் அவரது பாதங்களை தழுவி நன்றி தெரிவித்துக் கொள்வதாக உருக்கமாக பேசியுள்ளார்.
பின்னர், எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தெரிவு செய்யப்பட்டாலும் கூட விரைவில் ஆட்சியை மீட்டெடுப்போம் என தொண்டர்கள் மத்தியில் அவர் சபதம் எடுத்துள்ளார்.
மேலும், ஆட்சியை பிடிக்கும் வரை இந்த தர்ம யுத்தம் தொடரும் என்றும் மீண்டும் தர்மம் விரைவில் வெல்லும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.