ஜோதிடத்தில் பல வகை உண்டு. அதில் முக்கியமானது ஒருவர் பிறந்த நேரத்தை வைத்து அவர் குணாதிசயங்களை கணிப்பது.
அதன்படி பிறந்த நேரத்தை வைத்து அவர்களின் குணாதிசயங்கள் இதோ,
நடுஇரவு 12 – 2 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் குடும்பத்துக்கு எப்போதும் முன்னுரிமை அளிப்பார்கள். சமூக சூழல் விடயத்தை இவர்கள் நம்பிக்கையோடு கையாளுவார்கள்.
காலை 2 – 4 மணி
எல்லா விடயத்திலும் ஆர்வமாக இருக்கும் இவர்கள் புதிய கண்டுப்பிடிப்புக்காக மெனக்கெடுவார்கள். எழுதுவது, படிப்பது பிடித்த விடயமாக இருக்கும் இவர்கள் நட்புக்கு உண்மையாக இருப்பார்கள்.
காலை 4 – 6 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் வருங்கால வாழ்க்கை பற்றி அதிக அக்கறை கொண்டிருப்பார்கள். வளங்களை பாதுகாக்க விரும்பும் இவர்கள் மற்றவர்களை ஊக்கப்படுத்துவார்கள்.
காலை 6 – 8 மணி
இயற்க்கையிலேயே தலைவருக்கான பண்பு இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு இருக்கும். அவர்களிடமே அவர்கள் பலவிதமான கோரிக்கைகளை வைத்து கொள்வார்கள்.
காலை 8 – 10 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தனிமை விரும்பியாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடிய சுபாவம் கொண்ட இவர்கள் அதை தியானம் செய்வதன் மூலம் மாற்ற முடியும்.
காலை 10 – 12 மணி
புதிய நட்புகள், ஜாலியான விடயங்களுக்காக இவர்கள் மெனக்கெடுவார்கள். தங்களுக்கு பிடித்த விடயத்தை விரும்புகிறவர்களிடமே இவர்கள் நட்பு பாராட்டுவார்கள்.
மதியம் 12 – 2 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் லட்சியமும், பொறுப்பும் அதிகம் கொண்டிருப்பார்கள். இவர்கள் பணியில் சாதனை செய்தாலும் அது அவர்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கலாம்.
மாலை 4 – 6 மணி
நேர்மறை எண்ணங்கள் கொண்ட இவர்கள் தங்கள் மனதில் இருக்கும் முக்கிய விடயங்களை வெளிகாட்டி கொள்ள தயங்குவார்கள்.
மாலை 6 – 8 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் அடுத்தவர்களின் தேவையை புரிந்து கொள்வார்கள். வாழ்க்கை எப்படியோ அதை அதன்படியே வாழ்வார்கள்.
இரவு 10 – 12 மணி
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் தங்கள் தேவைகளை சரியாக புரிந்து வைத்திருப்பார்கள். நினைத்த லட்சியத்தை அடையும் திறமையும் இவர்களுக்கு இருக்கும்