சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அமேசான் இந்தியா வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனினை எண்ட்ரி லெவல் பிரிவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் டிசம்பர் 09 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான லேண்டிங் பக்கம் அமேசான் தளத்தில் இடம்பெற்று இருந்தது.
மேலும் புதிய ஸ்மார்ட்போனின் அம்சங்களும் அமேசான் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போன் சீ கிரீன் மற்றும் ஷேடோ புளூ நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, டூயல் கேமரா சென்சார்கள், வாட்டர் டிராப் நாட்ச் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனின் பவர் பட்டன் ணற்றும் வால்யூம் பட்டன்கள் வலதுபுறத்தில் இடம்பெற்று இருக்கிறது. புதிய கேலக்ஸி M04 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்திற்கும் குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என அமேசான் தளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மற்ற அம்சங்களை பொருத்தவரை 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர், 13MP பிரைமரி கேமரா, 2MP கேமரா, 5MP லென்ஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M04 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளேs
மீடியாடெக் ஹீலியோ P35 பிராசஸர்
அதிகபட்சம் 8ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன்
13MP பிரைமரி கேமரா
2MP கேமரா
5MP செல்ஃபி கேமரா
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்