Loading...
எடப்பாடி பழனிச்சாமி கடந்த 14-ந்தேதி 124 எம்.ஏல்.ஏ.க்கள் ஆதரவு பட்டியலை ஆளுநரிடம் அளித்தார். அதன்படி இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநனர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதல்வராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 30 அமைச்சர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.
பின்னர் சுமார் 6 மணியளவில் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு முதல்வர் பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள், அ.தி.மு.க. துணைச் பொதுச்செயலாளர் தினகரன் வந்தனர். முதல்வர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் தினகரன் மற்றும் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.
Loading...
அதன்பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிடம் மற்றும் அண்ணா நினைவிடத்திலும் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
Loading...