இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் மிர்சி சிவா நடிக்கும் திரைப்படம் ‘சலூன்’.
இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
‘சென்னை 28’, ‘தமிழ் படம்’, ‘கலகலப்பு’ போன்ற படங்களின் மூலம் கவனம் பெற்றவர் மிர்சி சிவா. இவர் சமீபத்தில் நடித்த ‘காசேதான் கடவுளடா’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது ‘கன்னிராசி’, ‘தர்மபிரபு’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்து குமரன் இயக்கத்தில் ‘சலூன் – எல்லா மயிரும் ஒன்னுதான்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரேதன் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார். அழர் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனை நடிகர் யோகி பாபு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மிர்சி சிவா வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.