காதுகளில் ஏற்படும் கடுமையான வலி போன்ற பிரச்சனைகளுக்கு காதுகளை தாக்கும் தொற்றுக் கிருமிகள் தான் முக்கிய காரணமாகும்.
அப்படி ஏற்படும் காதின் தொற்றுக் கிருமிகளை அழித்து, வலியை குறைப்பதற்கு, இயற்கையில் உள்ளது ஒரு அற்புத வழி!
தேவையான பொருட்கள்
- ஆலிவ் ஆயில்
- பூண்டு சாறு
பயன்படுத்தும் முறை
ஒரு துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2 துளிகள் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து, இயர் ட்ராப்பர் பயன்படுத்தி காதுகளில் விட வேண்டும்.
இதனால் காதுகளில் தொற்றுக்கள் மற்றும் வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அது விரைவில் குணமாகிவிடும்.
பூண்டில் ஆன்டி-மைக்ரோபியல் தன்மைகள் ஏராளமாக உள்ளது. எனவே இது காது பிரச்சனைகளை சரிசெய்வதோடு மட்டுமில்லாமல், வயிற்று வலி, வாந்தி, குமட்டல், யோனியில் ஏற்படும் அரிப்பு, வெள்ளைப்படுதல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வாக உள்ளது.
குறிப்பு
இந்த முறையை இரவில் தூங்கும் முன் செய்வதே மிகவும் சிறந்த நேரமாகும். முக்கியமாக காதுகளில் இருந்து எண்ணெய் மற்றும் சாறு வெளியே வராமல் இருக்க, ஒரு பஞ்சுருண்டையை காதுகளில் வைத்து அடைத்துக் கொள்ள வேண்டும்.