சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் ஆகக் குறைந்த செலவின் கீழ் விமான சேவைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமான சேவைகள் தினம் மற்றும் இலங்கையின் விமான தொழிற்துறை ஆரம்பிக்கப்பட்டு 110 வருடங்கள் பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
விமான சேவையானது தனவந்தர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட சேவையாக இருக்கக்கூடாது என்றும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் பல்வேறு நாடுகளில் வருமானம் குறைந்த மக்களுக்கு குறைந்த செலவில் பயணிக்க கூடிய பாதுகாப்பான விமான சேவைகள் இருப்பதாகவும் எவ்வாறாயினும் எமது நாட்டில் அந்த சேவைகள் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஆகையால் இதனை பரீசிலித்து சாதாரண மற்றும் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கும் விமான சேவைகளை வழங்க வேண்டும் என விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.