Loading...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (11) மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
Loading...
வடமேல் மாகாணம், மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும், மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் காலையில் மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையுடன் மின்னல் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Loading...