சட்டத்தை கையில் எடுப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்காது அவர்களை தண்டிக்கும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டத்தை கையில் எடுக்கும் சாதாரண பொது மக்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு தாம் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கொடூரமாக தாக்கப்பட்ட பெண்
வாகன விபத்துச் சம்பவமொன்றில் முச்சக்கரவண்டி சாரதியொருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, வாகனத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிடுகையில் அமைச்சர் பொதுமக்களுக்கு இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாக்குதல் நடத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொலிஸாரின் கடமையாகும். அதனை பொதுமக்கள் கையில் எடுத்துக் கொள்ளக்கூடாது என அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.