Loading...
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மனித உரிமைகள், சிறுவர் உரிமைகள், உடல் ரீதியான தண்டனையிலிருந்து சிறுவர்களை பாதுகாத்தல் எனும் தலைப்பில் செயலமர்வு இடம் பெற்றுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.
Loading...
இதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் மேற்படி தலைப்புக்கள் தொடர்பில் விரிவுரையாற்றினார்.
குறித்த செயலமர்வில் கிளிநொச்சி மாவட்ட தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட இணைப்பாளர்கள் , மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் மற்றும் ஆணைக்குழுவின் அலுவலர்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Loading...