- சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் தனது புதிய ஃபிளாக்ஷிப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- புதிய கேலக்ஸி S23 சீரிஸ் மாடல்களின் விவரங்கள் ஏற்கனவே FCC மற்றும் கீக்பென்ச் தளங்களில் லீக் ஆகி வருகிறது.
சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S23 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் விவரங்கள் FCC டேட்டாபேஸ் மற்றும் கீக்பென்ச் போன்ற தளங்களில் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த நிலையில், தற்போது சீனாவின் TENAA டேட்டாபேசில் கேலக்ஸி S23 சீரிஸ் விவரங்கள் வெளியாகி உள்ளது.
லிஸ்டிங்கின் படி SM-S9180 எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் ஸ்கிரீன், 1440×3088 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் 16.7M நிறங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிது. இந்த ஸ்மார்ட்போனின் எடை 233 கிராம்கள் ஆகும். அளவீடுகளை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 163.4mm, 78.1mm மற்றும் 8.9mm என உள்ளது. அம்சங்களை பொருத்தவரை ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 8 ஜிபி, 12 ஜிபி ரேம், 256 ஜிபி, 512 ஜிபி மற்றும் 1TB மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.
இத்துடன் கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 108MP பிரைமரி கேமரா, 12MP டெலிபோட்டோ கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2MP சென்சார், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் புதிய கேலக்ஸி S23 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 200MP பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த ஸ்மார்ட்போனில் கிராவிட்டி சென்சார், டிஸ்டன்ஸ் சென்சார், லைட் சென்சார் மற்றும் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை கேலக்ஸி S23 அல்ட்ரா மாடலில் NR SA பேண்ட்கள்- பேண்ட் 79, பேண்ட் 78, பேண்ட் 41, பேண்ட் 28, N1, 2110-2155MHz, NR NSA பேண்ட்கள்- பேண்ட் 41, பேண்ட் 78 மற்றும் பேண்ட் 79 வழங்கப்படும் என தெரிகிறது.