சியோமி நிறுவனம் சீன சந்தையில் ஏராளமான புது சாதனங்களை ஒரே நிகழ்வில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சியோமி 13 சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் அறிமுகம் செய்யப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி 13 மற்றும் சியோமி 13 ப்ரோ ஸ்மார்ட்போன்களுடன் சியோமி மினி PC அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இது மட்டுமின்றி சியோமி பட்ஸ் 4, சியோமி 10 ஜிகாபிட் ரௌட்டர் உள்ளிட்ட சாதனங்களும் இதே நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. ஏராளமான புது சாதனங்களில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மிகவும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டரை சியோமி நிறுவனம் அளவில் சிறியதாக உருவாக்கி அறிமுகம் செய்து இருக்கிறது.
புதிய சியோமி மினி PC அளவில் 112×112*38mm ஆக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த எடை 437 கிராம்கள் ஆகும். இதன் மெயின் பாடி அலுமினியம் அலாய் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் CNC, மெட்டல் சாண்ட்பிலாஸ்டிங் மற்றும் அனோட் ஆக்சிடேஷன் என ஏராளமான வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் காரணமாக சியோமி மினி PC தோற்றத்தில் மிகவும் எளிமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கிறது.
மினி PC மாடலில் சியோமி நிறுவனம் 12th Gen இண்டெல் கோர் i5 பிராசஸர், இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக் சப்போர்ட் வழங்கி இருக்கிறது. இத்துடன் 16 ஜிபி 3200MHz DDR4 ரேம், 512 ஜிபி PCIe NVM2 SSD, பின்புறம் 2x HDMI 2.1 இண்டர்ஃபேஸ், 1x 2.5G நெட்வொர்க் போர்ட், 1x யுஎஸ்பி 3.0 ஜென் 2, 1X யுஎஸ்பி 2.0 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 2x யுஎஸ்பி 3.0 ஜென் 2 போர்ட், 3.5mm ஹெட்போன் ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி மினி PC விண்சோஸ் 11 ஹோம் சைனீஸ் எடிஷன் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டே வழங்கப்படுகிறது. இதில் அதிகபட்சம் 100 வாட் வரையிலான பவர் இன்புட் வசதி உள்ளது. இதன் விலை 531 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 43 ஆயிரத்து 906 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் இதன் விற்பனை சீன சந்தையில் துவங்குகிறது.