கல்லறைக்குள் இருக்கும் போதே, இப்படி அடி விழுந்தால், ஜெயலலிதா, உயிரோடு இருந்த போது, எப்படி அடி வாங்கி இருப்பார் என்று சிந்திக்க வேண்டும்,’ என, தமிழக காங்கிரஸ், முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசினார்.
ஈரோட்டில் நடந்த, திருமண விழா ஒன்றில், அவர் பேசியதாவது:
தேசிய அளவில், தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், ஒரு வழக்கை தொடுத்து, மிகப்பெரிய தண்டனையை பெற்றுத் தந்துள்ளார். அயோக்கியத்தனம் செய்தால், தப்பிக்க முடியாது என்பதை உணரச் செய்துள்ளார்.
தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்கள் கல்லறை செல்ல வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும். இதை விடுத்து தப்ப முடியாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது.
எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு. தமிழகத்தை முந்தானையில் முடிந்து கொள்ளலாம் என நினைத்தால், சிறைக்குத்தான் போக வேண்டும்.
கல்லறைக்குள் இருக்கும் போதே, இப்படி அடி விழுந்தால், அவர் உயிரோடு இருந்த போது எப்படி அடி வாங்கி இருப்பார் என, சிந்திக்க வேண்டும்.
கிராமத்தில் உள்ள மக்கள் சொல்கின்றனர், ‘அடித்து கொன்று விட்டனர்’ என்று.
கல்லறையில் ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியை பார்த்தால், உண்மையிலேயே அடி வாங்கியவர், உயிரோடு இருக்க வாய்ப்பில்லை.
நாட்டை குட்டிச்சுவராக்கினால் போதும் என நினைத்தால், சிறையில் போய் தான் நிம்மதியாக இருக்க முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.