‘செத்தும் ஆயிரம் பொன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் மூலம் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளனர்.
‘செத்தும் ஆயிரம் பொன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய படத்தில் முதன்முறையாக ஜீ.வி.பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் இணைந்துள்ளனர். இவர்களுடன் காளி வெங்கட், இளவரசு, ரோஹிணி, ‘தலைவாசல்’ விஜய், கீதா கைலாசம், ‘பிளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை நட்மெக் புரொடக்ஷன்ஸ் எனும் பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராம் ஷெட்டி மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். முதல்முறையாக ஜிவி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் இணைந்துள்ளதால் படத்தின் மீது எதிர்பாரர்ப்பு அதிகரித்துள்ளது. இத்திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் திரையுலகினர், படக்குழு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் படபிடிப்பு இன்று தொடங்குகிறதாக படக்குழு அறிவித்துள்ளது.