கனடாவின் வினிபெக் பகுதியில் மாயமான 18 மாத குழந்தை ஒன்றை கண்டுபிடிக்க ஆர்சிஎம்பியினர் பொது மக்களின் உதவியை நாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வினிபெக் பகுதியில் இருந்து மாயமான இக்குழந்தையை அவளது தாயார் எடுத்து சென்றிருக்கலாம் என பொலிசார் தெரிவிக்கின்றனர். குழந்தையின் தந்தையான ஷெல்கெர்க்கை மனிரோபாவில் புதன்கிழமை காலை பார்ப்பதற்கென திட்டமிட்டிருந்த நேரத்தில் 36 வயதுடைய றெபேக்கா மிகாலொஷ் தனது மகளுடன் குறித்த பகுதியில் செல்லவில்லை என கூறப்படுகிறது.
குழந்தையின் தாயும் சியராவை பார்ப்பதில் பகிர்வு கவனிப்பு கொண்டவர்கள். ஆனால் குறிப்பிட்ட பகுதியில் இருந்து குழந்தையை வெளியே எடுத்து செல்ல தாய்க்கு அனுமதி இல்லை என கூறப்படுகிறது.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆர்சிஎம்பி தாயாருடன் தொடர்பு கொண்டபோது அனைவரும் நலமாக இருப்பதாகவும் ஆனால் பொலிசாரை சந்திக்க முடியாதென தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இரண்டு மூன்று தடவைகள் பொலிசார் தொடர்பு கொண்ட போதிலும் ஒரே பதிலை தாயார் தெரிவித்துள்ளார். GVD 275 லைசன்ஸ் தகட்டுடன் கொண்ட 2001 கிரே நிறமுடைய வோர்ட் ராறஸ் வாகனத்தில் குழந்தையை எடுத்து சென்றிருக்கலாம் என பொலிசார் கருதுகின்றனர்.
தற்சமயம் சஸ்கற்சுவான் மேற்கில் இருக்கலாம் எனவும் பிரிட்டிஷ் கொலம்பியாவை நோக்கி சென்று கொண்டிருப்பதாவம் நம்பபடுகின்றது.
இந்த நிலையில் குழந்தையுடன் மாயமான குறித்த தாயாருக்கு கனடா தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுமையும் தேடுதல் வேட்டையை முடக்கி விடப்பட்டுள்ளது.