நாம் கட்டிக்காக்க வேண்டிய பெரிய செல்வம் ஆரோக்கியம் தான். இது ஒன்று சீராக இருந்தால் வாழ்க்கையில் எந்த ஒரு தருணத்தையும் தைரியமாக கையாள முடியும். பழங்களை விட ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேறு உணவுகள் இருக்கிறதா என்ன?
இதோ, வாழைப்பழம், ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி சேர்த்து தயாரிக்கப்படும் மிக்ஸ்டு ஜூஸ் செய்வது எப்படி அதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்னென்ன என்று இங்கு காணலாம்…
தேவையான பொருட்கள்:
- வாழைப்பழம் ஒன்று
- ஆப்பிள் ஒன்று
- ஒரு கப் தேங்காய் பால்
- ஸ்ட்ராபெர்ரி இரண்டு
செய்முறை:
ஆப்பிள் விதைகளை நீக்கிவிடுங்கள். ஆப்பிளை மட்டும் முதலில் தனியாக அரைத்துக் கொள்ளவும். பிறகு அத்துடன் வாழைப்பழம், தேங்காய் பால், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை சேர்த்து நன்கு கரையும் படி பிளெண்டர் கலவை கொண்டு அரைக்கவும். அனைத்தும் நன்கு கலக்கும் படி செய்த பிறகு குடியுங்கள்.
நன்மைகள்:
இந்த மிக்ஸ்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் நாம் அடையும் நன்மைகள்..,
- கொலஸ்ட்ரால் குறைக்க செய்யும்.
- இரத்தத்தை சுத்திகரிப்பு செய்து இதய நலன் மேம்பட செய்யும்.
- செரிமானத்தை ஊக்குவிக்கும்.
- மலமிளக்க பிரச்சனைகளுக்கு தீர்வு தரும்.
- ஆன்டி-ஆக்ஸிடன்ட் நன்மை கொண்டுள்ளது.
- கட்டிகள் உண்டாகாமல் காக்கும்.
வைட்டமின்:
வாழைப்பழம், ஆப்பிள், தேங்காய் பால் மற்றும் ஸ்ட்ராபெர்ரி மிக்ஸ்டு ஜூஸ் குடிப்பதன் மூலம் நமது உடல் பெறும் வைட்டமின் சத்துக்கள்., வைட்டமின் A, B, B1, B2, C மற்றும் E
குறிப்பு:
தேவை என்றால் புதினா இலைகள் சிலவற்றை சேர்த்துக் கொள்ளலாம். வெள்ளை சர்க்கரையை தவிர்க்க வேண்டியது கட்டாயம்.