கட்டாரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியே தனது கடைசி உலகக் கிண்ணம் என லியோனல் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்கிழமை நடந்த அரையிறுதியில் குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜென்டினா அணி வென்றது.
இந்நிலையில் அந்நாட்டு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த மெஸ்ஸி, “இதை அடைய முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், எனது கடைசி ஆட்டத்தை இறுதிப் போட்டியில் விளையாடுவதன் மூலம் எனது உலகக் கோப்பை பயணத்தை முடித்துக்கொள்கின்றேன்.
அடுத்தவருக்கு பல ஆண்டுகள் ஆகும், என்னால் அதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கவில்லை என்றும் இந்த தொடருடன் தனது பயணத்தை நிறையவும் கொண்டுவருவதே சிறந்த முடிவு என்றும் கூறியுள்ளார்.
35 வயதான லியோனல் மெஸ்ஸி தனது ஐந்தாவது உலகக் கிண்ண போட்டியில் விளையாடி, டியாகோ மரடோனா மற்றும் ஜேவியர் மஷெரானோ ஆகிய நான்கு பேரையும் விஞ்சினார்.
இன்று புதன்கிழமை நடைபெறும் மற்றொரு அரையிறுதியில் பிரான்ஸ் மொராக்கோவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெறும் அணி இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணியை எதிர்கொள்ளவுள்ளது.