தமிழகத்தின் புதிய முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசு பங்களாவை காலி செய்யும்படி முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு அரசு தகவல் அளித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுடன் ஏற்பட்ட அதிகார மோதல் காரணமாக முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஓ பன்னீர் செல்வம் ராஜினாமா தர நிர்பந்திக்கப்பட்டார்.
இதனையடுத்து தமிழகத்தில் காபந்து அரசு ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில் ஓ.பி.எஸ் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் முதல்வர் பதவியை பிடிக்கும் வகையில் ஆதரவு திரட்டி வந்தனர்.
இதில் சசிகலா தரப்பு அறுதிப்பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறி எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அரசு அமைத்துள்ளது.
இதனையடுத்து புதிய முதல்வராக, எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள முதலமைச்சர் இல்லத்தை காலி செய்யும்படி பன்னீர் செலவத்திற்கு அரசு தரப்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சசிகலாவுக்கு எதிராக அணி திரட்டி போராடினார் என்ற காரணத்தாலே பன்னீர் செல்வத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கலாம் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.