Loading...
மட்டக்குளி – ஸ்ரீ விக்ரமபுர பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 4 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இரண்டு வீடுகள் முழுமையாகவும் ஏனைய இரண்டு வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீடொன்றிலிருந்த மண்ணெண்ணெய் அடுப்பு கவிழ்ந்ததால் தீ பரவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
Loading...
தீப்பரவலை கட்டுப்படுத்த கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவின் 5 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன.
இவ்விபத்தில் எவ்வித உயிர்ச்சேதங்களோ, எவருக்கும் காயங்களோ ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.
Loading...