நடிகை குஷ்பு தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவரது மூத்த சகோதரர் அபுபக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
சமீபத்தில் குஷ்பு தயாரிப்பில் வெளியான ‘காபி வித் காதல்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் அபுபக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதாககூறிய மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதற்காக குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில், “எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் திரை உலகினர் குஷ்புவிற்கு ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்து பதிவிட்டு வருகிறார்கள்.