முல்லேரிய அம்பத்தலே பிரதேசத்தில் உள்ள வீட்டின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தண்ணீரை சூடாக்க பயன்படுத்தப்படும் மின்சார ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த குழந்தையின் தாயும் அவரது மூத்த பிள்ளையும் வீட்டில் இருந்து வெளியில் இருந்துள்ளனர்.
வீட்டில் இருந்து புகை வருவதைக் கண்டு தாயாருக்கு அவரது மூத்த பிள்ளை தெரியப்படுத்தியபோதே அவர்கள் குழந்தை படுக்கையில் எரிந்து கிடப்பதை பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்திற்கான காரணம்
மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் உள்ள மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அருகில் உள்ள வீட்டில் இருந்து பாதுகாப்பற்ற நிலையில் மின்சாரம் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பாதுகாப்பற்ற நிலையில் மின்சார ஹீட்டரை பயன்படுத்தியுள்ளதாகவும் அதிலிருந்தே தீ பரவி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் தாய் ஹீட்டரை அணைக்காமல் வீட்டை விட்டு வெளியே சென்ற போது ஹீட்டரில் தீப்பிடித்து அதிலிருந்து கசிந்த நீர் குழந்தை உறங்கிக் கொண்டிருந்த மெத்தையில் பரவியதாகவும் பொலிஸ் ஊடக அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை உயிரிழந்த குழந்தையின் தந்தையும் போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.