அடுத்த வருடத்தில் 7 அல்லது 8 மணித்தியாலங்கள் மின்வெட்டை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்ற பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகரிக்கும் மின்வெட்டு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நிலக்கரி பிரச்சினையை தீர்ப்பதற்கு முடியாமல் போனால், எதிர்வரும் காலங்களில் நாளாந்தம் 7 அல்லது 8 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும்.
சுமார் 10 நிலக்கரி கப்பல்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த ஆண்டு நிலக்கரி இல்லாமல்போகும் நிலை அதிகமாக உள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதமளவில் இந்த பிரச்சினை மேலும் அதிகரித்து, பொறியியலாளர்கள் சங்கம் கூறுவதை போன்று, நாளாந்தம் 7 அல்லது 8 மணித்தியாலங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க நேரிடும்.
எனினும், ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து எந்த விதத்திலும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், அவ்வாறான நடவடிக்கை முன்னெடுக்கப்படுமாயின் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படு என குறிப்பிட்டுள்ளார்.