சில திறமையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இலங்கைக்கு எந்தவொரு டொலரையும் அனுப்புவதில்லை என இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார தெரிவித்தார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
திறமையான தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று சில டொலர்களை இலங்கைக்கு அனுப்பினால் அது நாட்டுக்கு நல்லது என நான் நினைக்கிறேன்.
வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் நாட்டுக்கு இழைக்கும் அநீதி
சில திறமையான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். ஆனால் அவர்கள் இலங்கைக்கு எந்தவொரு டொலரையும் அனுப்புவதில்லை, அது நியாயமில்லை.
உதாரணமாக மருத்துவரைப் போன்ற ஒரு நிபுணரை உருவாக்க அரசாங்கத்தால் பெரும் தொகை செலவிடப்படுகிறது.
சில சமயங்களில், அவர்கள் தங்கள் சொத்துக்களை விற்று, தங்கள் குடும்பத்துடன் இடம்பெயர்கிறார்கள், ஆனால் அவர்கள் எந்தவொரு டொலரையும் அனுப்புவதில்லை.
இலவசக் கல்வியைப் பெற்றவர்கள் என்ற வகையில் அவர்கள் தமது நாட்டுக்கு இழைப்பது பெரும் அநீதியாகும் என குறிப்பிட்டுள்ளார்.