ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 5ஜி சேவைகளை வெளியிடும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை பீட்டா டெஸ்டிங் செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் துவங்கியது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெல்கம் ஆஃப்ரின் கீழ் இன்வைட் செய்யப்படும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கி வருகிறது. முன்னதாக அக்டோபர் மாத வாக்கில் 5ஜி சேவைகளை வெளியிடும் பீட்டா டெஸ்டிங்கை ரிலையன்ஸ் ஜியோ துவங்கியது.
ஆப்பிள் நிறுவனம் இந்த வாரம் ஐஒஎஸ் 16.2 ஒஎஸ்-ஐ வெளியிட்டது. இந்த அப்டேட் ஐபோன் 12 சீரிஸ் மற்றும் அதன் பின் வெளியான ஐபோன்களில் 5ஜி சேவையை வழங்குகிறது. இதில் ஐபோன் SE 3 மாடலும் இடம்பெற்று இருக்கிறது. தற்போது 5ஜி சப்போர்ட் கொண்ட ஐபோன் வைத்திருப்பவர்கள் ஜியோ வெல்கம் ஆஃபரில் இணைந்து கொண்டு இலவமாக கிடைக்கும் அன்லிமிடெட் 5ஜி சேவையை பெறலாம்.
இதற்கு பயனர்கள் முதலில் ஐபோனில் ஐஒஎஸ் 16.2 இன்ஸ்டால் செய்ய வேண்டும். இன்ஸ்டால் செய்த பின் ஐபோன் செட்டிங்ஸ்-இல் 5ஜி-யை தேர்வு செய்தால் 5ஜி நெட்வொர்க்-ஐ பயன்படுத்த முடியும்.
ஐபோனின் செட்டிங்ஸ் — மொபைல் டேட்டா — வாய்ஸ் & டேட்டா ஆப்ஷன்களில் 5ஜி ஆட்டோ மற்றும் 5ஜி Standalone ON ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இத்துடன் செட்டிங்ஸ் — பேட்டரி — லோ பவர் மோட்-ஐ ஆஃப் செய்ய வேண்டும்.
தற்போது குஜராத், பூனே, டெல்லி, பெங்களூரு, ஐதராபாத், சென்னை, மும்மை, டெல்லி, கொல்கத்தா மற்றும் வாரனாசி போன்ற நகரங்களில் ஜியோ 5ஜி சேவைகள் வழங்கப்படுகின்றன. டிசம்பர் 2023-க்குள் நாட்டின் ஒவ்வொரு நகரங்களிலும் 5ஜி சேவையை வழங்கி முடிக்க திட்டமிட்டுள்ளதாக ஜியோ ஏற்கனவே அறிவித்து விட்டது.