தான் ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட பின்னர் முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் இரண்டு முறை தனது வீட்டிற்கு வருகைத்தந்து தனக்கு அவசியமான முறையில் செயற்படுவதாக கூறியதனாலே நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி தான் அவரை பதவியில் இருந்து நீக்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்துள்ளார்.
வரக்காபொல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போது கடந்த இரண்டு வருடங்களாக வெளிப்படுத்தாத தகவல்களாக ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி மாதம் 9ஆம் திகதி நான் ஜனாதிபதியாக பதவி பிரமானம் செய்துக் கொண்டேன். அதற்கு அடுத்த நாள் இரவு 9 – 10 மணிக்கிடைப்பட்ட நேரத்தில் அப்போதைய உச்ச நீதிமன்ற நீதியரசர் என்னை சந்திக்க வருகைத்தந்திருந்தார்.
“என்னை நீக்கப்போகின்றார்கள் சர். என்னை நீக்க வேண்டதம். சருக்கு அவசியமான வகையில் நான் செயற்படுகின்றேன்… என அவர் என்னிடம் கூறினார். நீதியரசர் ஒருவரை நீக்குவதற்கு தீர்மானம் இல்லை என கூறி அவரை அனுப்பி வைத்தேன்.
அவர் அதற்கு அடுத்த நாளும் என்னை சந்திப்பதற்கு வருகைத்தந்திருந்தார். என்னை நீக்கப்போகின்றார்கள் சர். என்னை நீக்க வேண்டாம். சருக்கு அவசியமான வகையில் நான் செயற்படுகின்றேன்… என அவர் என்னிடம் இரண்டாவது முறையாகவும் கூறினார்.
அந்த காலத்தில் இவர்கள் எவ்வாறு தீர்ப்பு வழங்கியிருப்பார்கள் என நான் அந்த சந்தர்ப்பத்தில் புரிந்துக் கொண்டேன். இதனாலேயே அவரை நீக்குவதற்கு தீர்மானித்தேன். நான் முதலாவது முறையான அவரை நீக்குவதற்காகவே என நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தினேன்… என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.