கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
ஈரான் நாட்டை சேர்ந்த இருவரே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
போலி கடவுச்சீட்டு
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்கு வந்து, சுவீடனின் – ஸ்டொக்ஹோமுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தமையினால் இவர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று காலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து அவர்களை இலங்கைக்கு பயணித்த விமானத்திலேயே நாடுகடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
20 ஆயிரம் யூரோ
மேலும் 41 வயதான ஈரானிய இசைக்கலைஞர் ஒருவரும், 50 வயதான புகைப்படக் கலைஞர் ஒருவரும் இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அவர்கள் போலி நோர்வே கடவுச்சீட்டுக்களைத் தயாரிப்பதற்காக, துருக்கியைச் சேர்ந்த தரகர் ஒருவருக்கு, 20 ஆயிரம் யூரோவை வழங்கியுள்ளதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களின் பயணப் பையில் இருந்த, இரண்டு ஈரான் கடவுச்சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.