- முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- முதல் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் எடுத்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டில் 74 ரன் வித்தியாசத்திலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 26 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 79 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். அகா சல்மான் அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார். அசார் அலி 45 ரன்னிலும், ஷான் மசூத் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டு வீழ்த்தினர்.
அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்துள்ளது.