- சிவன் கோவில்களில் மார்கழி மாதம் அஷ்டமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- மதுரையில் நடைபெறும் அஷ்டமி திருவிழா சிறப்பு வாய்ந்தது என்று பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளன.
கயிலை மலையில், ஒருநாள் சிவபெருமானை சோதிக்க பார்வதி தேவி முடிவு செய்தார். அனைத்து ஜீவராசிகளுக்கும் நீங்கள் சாப்பாடு கொடுத்து விடுவீர்களா? என்று கேட்டார். அதற்கு இறைவன் ஆம் என்றும், எல்லா நேரத்திலும் என்னுடைய கடமைகளை செய்து கொண்டிருப்பேன் என்றும் கூறினார்.
அப்போது பார்வதிதேவி, ஒரு குவளையில் எறும்பு ஒன்றை போட்டு மூடிவிட்டார். பின்னர் இறைவனிடம் அந்த குவளையை காண்பித்து இதில் அடைபட்டு கிடக்கும் அந்த ஜீவனுக்கு மட்டும் நீங்கள் உணவு கொடுக்கவில்லை? என்று வாதிட்டார்.
அப்போது சிவபெருமான், அதற்கும் சேர்த்துதான் படியளந்து இருக்கிறேன். அதற்கு உணவு கிடைத்து இருக்கும் என்று கூறி அந்த குவளையை திறக்க சொன்னார். பார்வதி தேவி அதனை திறந்து பார்த்த போது, அந்த எறும்பு அரிசியை சாப்பிட்டு கொண்டிருந்தது. இதை பார்த்து பார்வதி தேவி ஆச்சரியம் அடைந்தார்.
இந்த திருவிளையாடல் குறித்தும், எல்லா உயிர்களுக்கும் பசியை போக்க இறைவன் செய்திருக்கும் அற்புதங்களை பக்தர்களுக்கு எடுத்துக்கூறும் விதமாகத்தான், சிவன் கோவில்களில் மார்கழி மாதம் அஷ்டமி திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் மதுரையில் நடைபெறும் அஷ்டமி திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று கந்த புராணம் உள்பட பல்வேறு புராணங்களில் கூறப்பட்டுள்ளன.