நாட்டில் இருமல் மற்றும் சளி பரவுவதற்கு வைரஸ் மற்றும் டெங்கு போன்ற காரணங்கள் இருப்பதாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
தற்போதைய மோசமான குளிர் காலநிலை வைரஸ் தொற்று, கொரோனா தொற்று மற்றும் அதிகரித்துள்ள டெங்கு நிலை காரணமாக அதிகமான நோயாளிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் மாத்திரம் சுமார் 40 டெங்கு நோயாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் விஜேவிக்ரம தெரிவித்தார்.
டிசம்பர் மாதத்தின் முதல் சில வாரங்களில் கொழும்பு மாவட்டத்தில் 254 டெங்கு நோயாளர்களும், இம்மாதத்தில் நாடு முழுவதும் 1323 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
இந்த நோய்களைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதற்காக மருத்துவரைப் பார்ப்பது சரியான நடவடிக்கை என விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம சுட்டிக்காட்டியுள்ளார்.