ரஷ்யாவைத் தொடர்ந்து, இலங்கை மற்றும் மொரிஷியஸ் வங்கிகளும் புதுடில்லியில் உள்ள உள்ளூர் கிளைகளில், ஒரு வங்கி மற்றும் வங்கியின் சார்பாக வைத்திருக்கும் கணக்கான வொஸ்ட்ரோ என்ற சிறப்பு ரூபாய் வர்த்தகக் கணக்குகளைத் திறந்துள்ளன.
இதுவரை 18 வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் உள்ள 11 உள்ளூர் வங்கிக் கிளைகளுடன் சிறப்பு ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சக தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி, ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியா, இலங்கை மற்றும் மொரீஷியஸ் வங்கிகளின் ரூபாய் வர்த்தக கணக்குகளையும் ஆரம்பித்துள்ளதாக இந்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
நாடுகளின் பொருளாதாரத் தடை
முன்னதாக, அமெரிக்கா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடைகளின் அபாயத்தைக் காரணம் காட்டி, ரஷ்ய நிறுவனங்களுக்கு ரூபாய் வர்த்தகக் கணக்குகளைத் திறக்க, ஸ்டேட் பேங் ஒப் இந்தியா தயக்கம் காட்டியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் தற்போது இந்தியாவின் ஏனைய வங்கிகளும் வொஸ்ட்ரோ கணக்குகளை திறந்துள்ளன. எனினும் வொஸ்ட்ரோ கணக்கு எப்படி செயல்படும் என்பதில் தெளிவு இல்லை.
இந்த நிலையில் இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, வங்கியாளர் அல்லது ஏற்றுமதியாளர் மட்டத்தில் செயல்பாட்டு அம்சம் குறித்து எந்த சந்தேகத்தை போக்குவதற்காக புதுப்பிக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது.